அந்தமானில் பாரன் தீவில் அமைந்துள்ள இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெடித்துள்ளது.
இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை அந்தமான் தீவுகளில் உள்ள பாரன் தீவில் உள்ளது. இதுதவிர, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் செயலிழந்த நிலையில் இருக்கும் நார்கொண்டம் எரிமலை, குஜராத்தில் உள்ள தினோதர் மலைகள், ஹரியானாவில் உள்ள தோசி மலை போன்ற எரிமலை அமைப்புகள் இந்தியாவில் உள்ளன.
குறிப்பாகப் பாரன் தீவில் அமைந்துள்ள எரிமலை கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதியன்று வெடித்தது.
அதன் தொடர்ச்சியாகச் செப்டம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு முறை வெடித்துள்ளது. இந்த வெடிப்பினால் நெருப்பு பிழம்புகள், சாம்பல், புகை வெளியேறின.