திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள், தேர்தல் வாக்குறுதிகளைத் திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென கூறி அனல் மின் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில் அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.