தைவானில் அணை உடைந்ததன் காரணமாகக் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தைவானின் ஹுவாலியனில் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள அணை ஒன்று உடைந்தது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குடியிருப்புகள் அனைத்தும் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பல்வேறு பொருட்கள் மற்றும் வாகனங்களை வெள்ளம் அடித்துச் சென்றது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.