பிரதமர் மோடியின் ‘சுதேசி’ அழைப்பை ஏற்று, ZOHO நிறுவனத்தின் சேவைக்குத் தாம் மாறிவிட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்தச் சூழலில், தனது 75வது பிறந்தநாள் செய்தியாக, அகண்ட பாரதத்தைக் கட்டியெழுப்பும் பணியின் ஒரு பகுதியாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சுதேசி பொருள்கள் மற்றும் சுதேசி சேவைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
திருத்தியமைக்கப் பட்ட புதிய GST வரி பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குச் ‘சுதேசி’ இயக்கம் வலுசேர்த்ததை போல, தற்போது நாட்டின் வளர்ச்சிக்குச் சுதேசி எனும் ஒற்றைச் சொல் வலிமை சேர்க்கும் என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வாங்குவதிலும், விற்பதிலும் இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சுதேசி பொருட்களை ஊக்குவிப்பது, உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதோடு, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ‘சுயசார்பு இந்தியா’ என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியான ‘சுதேசி’ முழக்கம், நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, தமது அன்றாட அலுவலக பயன்பாட்டுக்கான சேவைகளைப் பெற, இந்தியாவின் ஜோஹோ நிறுவனத்தின் மென்பொருள் சேவைக்கு மாறிவிட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் ‘சுதேசி’ கோரிக்கையை வலுசேர்க்கும் விதத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில், குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஜோஹோவில் பணியாற்றி வரும் பொறியாளர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது என்றும், தேசத்தைப் பெருமையடைய செய்வோம் என்றும் எக்ஸ் தளத்தில் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
உலகமெங்கும் அரசு, தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பல்வேறு தரவுகளை பராமரிக்க மைக்ரோசாஃப்ட் எக்செல் (MS EXCEL), கூகுள் ஸ்பிரட்ஷீட் (GOOGLE SPREADSHEET) ஆகிய மென்பொருள் சேவைகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு மாற்றாக, இந்திய மென்பொருள் சேவை நிறுவனமான Zoho, 50-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வசதிகளை அளித்து வருகிறது. 1996-ஆம்ஆண்டு மைக்ரோ சாப்ட் மற்றும் கூகுள் நிறுவனத்துக்குப் போட்டியாக Zoho நிறுவனத்தை தமிழரான ஸ்ரீதர் வேம்பு மென்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கினார்.
Zoho Writer, Zoho Sheet and Zoho Show serve, Zoho Forms, Zoho Books, Zoho Creator, Zoho Mail, Zoho Invoice, Zoho Projects, Zoho Recruit, Zoho Inventory, Zoho Notebook, Zoho Meeting, Zoho Calendar support planning, எனச் சுமார் 50க்கும் மேற்பட்ட மென்பொருட்களை ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Zoho மென்பொருளை உலகெங்கும் சுமார் 8 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஸ்டார்ட்அப்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது Zoho நிறுவனம். Amazon, Netflix, Deloitte, Puma, Toyota, Sony, L’Oreal rely உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் Zoho மென்பொருளைப் பயன்படுத்துகின்றன என்பதே இந்திய தரத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
“இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” மற்றும் “உலகத்துக்காக உருவாக்கப்பட்டது.” என்ற முழக்கத்துடன் செயல்படும் Zoho உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் செல்வாக்குடன் திகழ்கிறது.
Zoho நிறுவனம், தனது தொழில்நுட்ப மேம்பாடுகளை Software as a Service என்ற நிலையில் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறது. சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளையும் Zoho உருவாக்கியுள்ளது.
Zohoவின் Zia Agent Studio, AI-இயக்கப்படும் “டிஜிட்டல் ஊழியர்களை” உருவாக்கக்கூடிய தளமாகும். Zia Agent Marketplace-ல் ஏற்கனவே 25 க்கும் மேற்பட்ட Zoho AI முகவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-ல் ஸ்டார்ட் அப் திட்டத் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு இந்தியா எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். 2025-ல் உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
‘இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த எதிரியைத் தோற்கடிக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மொத்த தேசமும் ஈடுபடும்போது, இந்தியாவின் வெற்றி யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.
















