நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை ராதிகாவின் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அப்போது கீதா ராதாவின் திருவுருபடத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைதொடர்ந்து நடிகை ராதிகா மற்றும் சரத்குமாருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார்.