பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியது. இது பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் மாத இறுதியில், அரிசி, பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றை கொண்ட கிழக்கு பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமடைந்தது.
குறிப்பாக இரண்டரை மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. வெள்ளத்தால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதோடு ஜூன் 26-ம் தேதி முதல் தற்போது வரை 950க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.