கனமழையால் கொல்கத்தாவின் பல இடங்களின் நிலைமை இதுதான்.
சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீரில் நடந்து செல்வதே சவாலாக இருப்பதாக மக்கள் உணர்ந்தனர். அரசுப் பேருந்துகளும் கூடச் சில சாலைகளை கடந்து செல்ல முடியாமல் திணறின.
இயற்கையின் அதீத ஆற்றலுக்கு முன் மனிதர்கள் எல்லாம் சாதாரணம் என்ற எண்ணம் ஏற்படும் அந்தத் தருணத்தில் தான் இந்தக் காட்சியும் கொல்கத்தாவில் பதிவாகி இருக்கிறது.
ஒரு தெர்மோகோல் அட்டையை வைத்துக் கொண்டு, தேர்ந்த அலை சறுக்கு வீரன் போல் அந்தச் சிறுவன் செய்த செயல்கள், காண்போரை சிந்திக்க வைத்தன.
வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான சூழலையும் கடந்து செல்லக்கூடிய பக்குவம், இவர்களைப் போன்றோர் மனதில் இருந்தே உதயமாகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.