இந்தியாவின் தீவிர பங்கை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபையின் 80வது கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், போர் நிறுத்தம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் தீவிர பங்கை உக்ரைன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.