பாகிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
பாகிஸ்தான் அரசுக்கும், பலூச் விடுதலை அமைப்பினருக்கும் இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மஸ்துங் மாவட்டத்தின் ஸ்பெஸாண்ட் நகரின் அருகே குவெட்டா-பெஷாவர் வழித்தடத்தில் பயணித்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்மீது பலூச் விடுதலை அமைப்புத் தாக்குதல் நடத்தியது.
இதில் 5 பெட்டிகள் தடம் புரண்டன. தொடர்ந்து இந்த தாக்குதலுக்குப் பலூச் குடியரசு காவல்படை பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த அமைப்பை சேர்ந்த நபர், இந்தத் தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் இராணுவம் பொதுமக்கள் பயணிக்கும் ரயில்களைத் தங்களது சொந்த தேவைக்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் இராணுவத்தினரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்
. மேலும் பாலூசிஸ்தானுக்கான சுதந்திரம் கிடைக்கும் வரை தங்களின் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.