ஹாங்காங்கில் உருவான ரகசா அதிதீவிர புயலால், தைவானில் உள்ள ஏரியின் தடுப்புச் சுவர் உடைந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
புயல் காரணமாகத் தைவானில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள மிகவும் பழமையான ஏரியின் தடுப்புச் சுவர் உடைந்தது. நகருக்குள் தண்ணீர் புகுந்ததில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 124 பேர் மாயமாகினர். தைவான் முழுவதும் ரகசா புயல் காரணமாக ஏழாயிரத்து 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
தரைத்தளம் மட்டுமின்றி முதல் மாடியில் இடுப்பளவு தண்ணீர் புகுந்ததால் ஊர் முழுவதும் நாசமானது. இது ஹாங்காங் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது மட்டுமின்றி, அவர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.