ஹாங்காங்கில் ரகசா என்ற மிகவும் சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியதால், பொதுமக்களுக்கு 10ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஹாங்காங் முழுவதும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
மேலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால், சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் கடல் மட்டம் 4 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் ஹாங்காங் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே சூறாவளியின்போது ஒரு சிறுவனையும், ஒரு பெண்ணையும் கடலலை இழுத்துச் சென்றது. இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹாங்காங்கில் ரகசா புயல் மிகப்பெரும் பேரிடரை உருவாக்கிய நிலையில், பொதுமக்களுக்காக 49 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.