தெலங்கானாவில் இளைஞர்கள் சிலர் தங்களை பப்பிற்குள் அனுமதிக்காததால், பப் பவுன்சர்களை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே மாதப்பூரில் உள்ள பப் ஒன்றில் பில் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகப் பப்பிற்கு வந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பவுன்சர்கள் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தங்களை பப்பிற்குள் அனுமதிக்காததால் பவுன்சர்களை சரமாரியாகத் தாக்கினர்.
இதில் 4 பவுன்சர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவியில் பதிவான இளைஞர்களை கண்டறிந்து, அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.