சென்னை சிவானந்தா சாலையில் உள்ள PIB அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அலுவலகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
இறுதியில் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
















