இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான பாடல் காப்புரிமை வழக்கில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருந்த வீர ராஜ வீர பாடல் தனது தந்தை இசையமைத்தது எனக்கூறி பாடகர் ஃபையாஸ் வசிஃபுதின் காப்புரிமை வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் செய்த மேல்முறையீட்டில், தனி நீதிபதி விதித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.