மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார், மழை வெள்ளத்தில் பழுதாகி நின்றது சமூக வலை தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
கொல்கத்தாவில் கடந்த சில தினங்களாகக் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் பழுதாகி நடுவழியில் நின்றது.
சுமார் 10 கோடி மதிப்புள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார் தான் சமூக வலைதளத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
விலை உயர்ந்த இந்தச் சொகுசு கார் பழுதாகி நடுவழியில் நிற்க 10 லட்சம் மதிப்புள்ள இந்திய தயாரிப்பான டாடா நிறுவனத்தின் கார் அதனை கடந்து சென்றுள்ளது.
இதுகுறித்த வீடியோவை பகிர்ந்த வாகன ஓட்டி, 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார் மழையில் பழுதாகி நிற்க 10 லட்சம் மதிப்புள்ள டாடா கார் அதை கடந்து செல்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.