சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை 20 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை – சென்னை வழித்தடத்தில் தினசரி இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், தென் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அவ்வப்போது அதிகரித்து வரும் ரயில்வேத்துறை கடந்த ஜனவரி மாதம் 8 பெட்டிகள் கொண்ட சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகளை இணைத்தது.
16 பெட்டிகளாக இயங்கி வந்த வந்தே பாரத் ரயிலை 20 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் எனத் தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ரயில்வேத்துறை, சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, நெல்லை – சென்னை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதனால், தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.