அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அர்ஜென்டினாவின் படகோனியாவில் தொல்லியல் ஆய்வாளர்கள் புதை படிமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வில் ஒரு புதிய டைனோசர் இனத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசர் சுமார் 7 மீட்டர் நீளமாக இருக்கலாம் என்றும் மெகாராப்டோரன்ஸ் எனப்படும் டைனோசர் குழுவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த டைனோசர் 66 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அதன் வாயில் முதலை எலும்பும் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த டைனோசர் இனம் சமவெளிகளில் முதன்மையான வேட்டையாடும் இனமாக இருந்ததா என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்தப் புதிய இனத்திற்கு ஜோவாகின்ராப்டர் கசாலி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.