தினமும் ஆஸ்பிரின் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் என ஸ்வீடன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்களும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனையில், தினசரி குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தை 55 சதவீதம் வரை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆராய்ச்சியானது கரோலின்ஸ்கா நிறுவனம் மற்றும் கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலை 1 முதல் 3 வரையிலான பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 626 நோயாளிகளிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்பிரின் உலகளவில் உடனடியாகக் கிடைக்கும் ஒரு மருந்து என்பதால், பல நவீன புற்றுநோய் மருந்துகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவு என்றும் விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.