குழித்துறை அருகே நடந்த அனைத்திந்திய மாதர் சங்க மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது நாற்காலிகள் காலியாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் 17வது மாநில மாநாடு நடைபெற்றது. மாதர் சங்க மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார்.
திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாராயண குரு, ராமலிங்க அடிகளார் போன்றவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்கள் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது அங்கிருந்த நாற்காலிகள் காலியாகவே இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.