தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளரான பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.
தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளரான பீலா வெங்கடேசன், உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த அவர், பம்பரமாகச் சுழன்று பணியாற்றியவர். இதன் காரணமாகத் தமிழக மக்களின் மனதிலும் இடம்பிடித்திருந்தார்.