கப்பல் மற்றும் கடல்சார் வணிக துறை சீர்திருத்தங்களுக்கு 69 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கப்பல் கட்டுமான தொழிலை ஊக்குவிக்கும் வகையில் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க 24 ஆயிரத்து 736 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், கப்பல் கட்டுமான தொழில் வளர்ச்சி திட்டத்திற்கு 19 ஆயிரத்து 989 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடல்சார் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மத்திய அரசின் நடவடிக்கையால் கடல்சார் துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.