திமுக ஆட்சியின் கடைசி 6 மாதத்தில் திருமாவளவனை துணை முதல்வராக்கி, சமூக நீதி காவலர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் வாங்கி கொள்ளட்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசியவர்,
14 வயது மாணவன் மீது விடுதியில் வைத்தே கொடூரமான தாக்கப்பட்டதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்தார்.
விடுதிகளுக்குச் சமூக நீதி என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது என்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது இருவர் உயிரிழந்துள்ளனர் என்றால் சமூக நீதி எங்கே இருக்கிறது? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
இதற்குத் திருமாவளவன் பதிலளிக்க வேண்டும்” “திருமாவளவனை துணை முதல்வராக்கி சமூக நீதி காவலர் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் எடுத்துக் கொள்ளட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
GST வரிக்குறைப்பை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது என்றும் மன்மோகன் சிங் ஆட்சியில் 17 விதமான வரி இருந்தது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.