ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை உக்ரைன் குறிவைத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் முக்கிய கடல் துறைமுகமான நோவோரோசிஸ்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு அலுவலகம் சேதமடைந்ததது. மேலும் இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.