காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் திருச்சியில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் போராட்டம் நடைபெற்றது.
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் நவம்பர் 24ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.