சீனாவில் ரகசா புயல் கோர தாண்டவம் ஆடிய வீடியோ, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த ரகசா புயல், மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. யாரும் அவன் குறுக்க போயிடாதீங்க சார் என்பது போல், வெளியே நின்றால் ஆளையே தூக்கி வீசிவிடும் என்பது இந்த காணொளியை பார்க்கும் போது கண்கூடாகத் தெரிகிறது.
சீனாவில் இந்தப் புயலால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல கோடிக்கணக்கில் சீனாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நிவாரணப் பணிகளைச் சீன அரசு மேற்கொண்டு வருகிறது.