புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது.
புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசிச் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை படிப்படியாக அதிகரித்து கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இடைவிடாது பெய்த கனமழை சற்று நிம்மதி அளித்தது.