தாதாசாகேப் பால்கே விருதினை பெறுவதற்காக டெல்லி சென்ற நடிகர் மோகன்லால் மீண்டும் கேரளா திரும்பினார்.
திரைத்துரையில் மோகன் லால் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்குத் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு விருதினை வழங்கிக் கவுரவித்தார். மேலும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலரும் தேசிய விருது பெற்றனர்.
இந்நிலையில், நடிகர் மோகன் லால் மீண்டும் கேரளா திரும்பினார். கொச்சி விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.