நெய்க்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்துள்ளதாக ஊத்துக்குளி நெய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பால் வகைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் வெண்ணெய், நெய் ஆகியவற்றின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
800 முதல் 900 ரூபாய் வரை விற்கக்கூடிய ஒரு லிட்டர் நெய்யின் விலை தற்பொழுது 50 முதல் 60 ரூபாய் விலை குறைந்து 750 முதல் 850 ரூபாய் வரை விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், வரும் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாக, நெய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.