கடலூர் மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் கோயில் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பைநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மளிகை கடை, துணிக்கடை மற்றும் கோயில் உள்ளிட்ட 8 இடங்களில் இந்தத் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
முகமூடி மற்றும் தலைகவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கம்பைநல்லூர் காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.