தாய்லாந்தில் மிஸ் அழகியின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து, அவரது மகுடம் பறிக்கப்பட்டது.
தாய்லாந்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற மிஸ் அழகி போட்டியில் பேபி என்றழைக்கப்படும் சுஃபானி நொய்னொன்தாங் என்ற இளம்பெண் வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார்.
ஆனால் அவர் வெற்றி பெற்றதற்கு மறுநாள் அவரது சில சர்ச்சைக்குரிய வீடியோக்கள் ஆன்லைனில் பரவியது.
அதில் அவர் மிகவும் மோசமான உடையணிந்து, இ-சிகரெட் புகைத்தபடி நடனமாடியுள்ளார். இது மிஸ் அழகி போட்டிக்குழுவின் கண்களுக்குப் பட்டதை தொடர்ந்து, அவரது மகுடம் பறிக்கப்பட்டது.
இது தொடர்பாகப் போட்டிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டியாளர்கள் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.