உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் பெண் பயணிகளை டாக்ஸி ஓட்டுநர் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நொய்டாவில் பொட்டானிக்கல் கார்டன் மெட்ரோ நிலையத்திலிருந்து செக்டார் 128க்கு சில பெண்கள் டாக்ஸியில் சென்றனர்.
அப்போது வழக்கமாகச் செல்லும் வழியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்ததால், அவர்கள் மாற்று பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்ஸி ஓட்டுநர், அவர்களை தவறாகப் பேசியதுடன், கீழே இறக்கிவிட்டு தாக்கவும் முற்பட்டுள்ளார். இதனைப் பதிவு செய்த பெண் பயணிகள், அந்த ஓட்டுநர்மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.