திமுக அரசு நிகழ்ச்சியில் கல்லூரி வேலை நேரத்தைத் தாண்டி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புக் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில செயலாளர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை கல்லூரி மாணவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்காக, மாநிலம் முழுவதும் குழு அமைத்து ஒவ்வொரு கல்லூரிக்கும் பேராசிரியர்களை நிகழ்ச்சி கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கல்லூரியின் வேலை நேரத்தைத் தாண்டி மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
துணைவேந்தர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் முறையாக நியமிக்கப்படாததால் தமிழக கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தலை மையமாகக் கொண்டு மாணவர்கள் மத்தியில் திமுக அரசின் சாதனை என்ற மாய பிம்பத்தை விளம்பரப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில செயலாளர் சூர்யா தெரிவித்துள்ளார்.