சேலம் மாவட்டம் எடப்பாடியில் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் கோவிந்தராஜன் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
மூலப்பாதை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரிடம் பட்டா நிலத்திற்கு NOC சான்றிதழ் வழங்கத் தனி வட்டாட்சியர் கோவிந்தராஜன் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர்களின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டை இருவரிடமும் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.