டெக்சாஸ் கடற்கரையில் டஜன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ள அரிய வகை ஜெல்லி மீன்களின் வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகியுள்ளது.
‘பிங்க் மீனி’ என்று அழைக்கப்படும் இந்த அரிய வகை ஜெல்லி மீன்கள் கடந்த 2011-ம் ஆண்டு கீத் பயா என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்த ஜெல்லி மீன்கள் டெக்சாஸின் 10 மைல் நீளக் கடற்கரையில் டஜன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளதாக HARTE ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சு மிட்டாய் போன்ற இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஜெல்லி மீன்கள் 50 பவுண்டுகளுக்கு மேல் எடை கொண்டவை எனவும், இவற்றின் TENTACLES சுமார் 70 அடி நீளம் வரை வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகக் கோடைகால இறுதியில் மட்டுமே GULF OF MEXICO பகுதிகளில் தென்படும் இந்த வகை ஜெல்லி மீன்கள், MOON JELLY FISH எனப்படும் ஒருவகை ஜெல்லி மீன்களைத்தான் வேட்டையாடி உண்ணுமாம்.
சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வாழும் இந்த இன ஜெல்லி மீன்கள் தனது உணவான MOON JELLY FISH-களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலோ, கடல்நீர் குளிர்ந்துவிட்டாலோ விரைவாக அழிந்துவிடும் என்பதால், இந்த இன ஜெல்லி மீன்களை நேரில் காண்பது மிகவும் அரிது என்கின்றனர் கடல்சார் ஆராய்ச்சி நிபுணர்கள்.