உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா பெரும்பாலும் தங்கள் பக்கமே நிற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போருக்கு இந்தியாவும், சீனாவும் முதன்மையாக நிதியளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாகப் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, இந்தியா போருக்குப் பங்களிப்பதாக தாம் நினைக்கவில்லை என்றும், இந்தியா பெரும்பாலும் உக்ரைன் பக்கம் தான் நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடு இருந்தாலும், அவற்றைச் சமாளிக்க முடியும் எனக்கூறிய ஜெலன்ஸ்கி, இந்தியா உடனான உறவை ஐரோப்பா வலுப்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவை தன்பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.