பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் 26 பேரை அவர்களின் மதத்தை கேட்டுப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்குறித்த புகைப்படங்களை வெளியிட்ட போலீசார் அவர்கள்குறித்து தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து ஆப்ரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கு உதவிய முகமது கட்டாரியா என்பவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.