சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், ரோப் கார் சேவை பாதிக்கப்பட்டால், பக்தர்களை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியைத் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தத்ரூபமான செய்து காண்பித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் ஆயிரத்து 33 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் நலன் கருதி, ரோப் கார் சேவை அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரோப் கார் சேவையில் பழுது ஏற்பட்டால், பக்தர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஒத்திகை மேற்கொண்டனர். அப்போது மீட்பு மற்றும் முதலுதவி குறித்து அவர்கள் தத்ரூபமாகச் செய்து காண்பித்தனர்.