காவிரி – அய்யாறு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும், மாணவர்களுக்கான கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.