சேலம் மாநகராட்சி நிர்வாகம், விஞ்ஞான முறைகேட்டில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மட்டுமின்றி, திமுக கவுன்சிலர்களும் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, மாநகராட்சியில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டு வரப்பட்ட வ.உ.சி.மார்க்கெட்டில் குத்தகைதாரர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்தார். அவரின் கருத்திற்கு திமுக கவுன்சிலரும் ஆதரவளித்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் விஞ்ஞான முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.