இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகர் சைந்தவியை காதலித்து கடந்த 2013ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த இருவரும், பிரிவதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி செல்வ சுந்தரி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையைச் சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென நீதிபதியிடம் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.