உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் முகாம்களைப் புறக்கணித்து நடைபெற்ற போராட்டத்தில் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்காமல், அவசர கதியில் முடிவெடுக்க வற்புறுத்தப்படுவதாக வருவாய்த்துறை அலுவலர்கள் புகார் கூறினர்.
திமுக அரசின் நிர்வாக அழுத்தம் காரணமாக அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும், அலுவலர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















