காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஊதா நிற பட்டு உடுத்தி வரதராஜ பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
4-ம் நாளான நேற்று ஊதா நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய மாலைகள் அணிந்து, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளும் தாயாரும், நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயணங்கள் ஓத ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.