தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரியை ஒட்டிப் பெரியநாயகி அம்மன் காயத்ரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டிற்காக நவராத்திரி விழா கடந்த 22 – ம் தேதி தொடங்கியது. நவராத்திரியின் நான்காம் நாளாக நேற்று பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து நந்தி மண்டபத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.