ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான 4வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றியதன் மூலம், ஆசிய கோப்பையில் இதுவரை 31 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மேலும், ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் வரிசையிலும் குல்தீப் யாதவ் 2வது இடத்தை பிடித்துள்ளார்.