அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்றும், சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புவது வேதனையளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய முன் தினம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது, விளககம் அளித்த பிறகும சிலர் வதந்திகளை பரப்பி வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்,.
அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்றும், சொந்த வேலையை முடித்துவிட்டு ரயிலில் கோபி வந்தடைந்ததாகவும் கூறினார்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெறவேண்டும் என அவர் தெரிவித்தார். முன்னாள் முதவர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் கனவு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வயார் வதந்திகளை பரப்புகிறார்களோ அவர்களே நிறுத்து கொண்டால் நலமாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.