திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி திருக்கோயிலில் 4 கோடியே 16 லட்சம் ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
கோயில் உண்டியல்கள் நிறைந்ததை தொடர்ந்து காணிக்கை எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. கோயில் அலுவலர்கள், மாணவர்கள், வங்கி பணியாளர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 4 கோடியே 16 லட்சம் ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது. 890 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 275 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி உள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.