கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுங்கத்துறையினரிடமிருந்து தப்பிய தங்க கடத்தல் நபர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
கரிப்பூர் விமான நிலையம் வழியாக நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த நபர் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் தப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஷூ சாக்ஸ்க்குள் மறைத்துத் தங்கம் கடத்தி வந்த மலப்புரத்தை சேர்ந்த ஃபசவு ரகுமான் போலீசார் சோதனையில் சிக்கி கொண்டார்.
இதையடுத்து 843 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.