தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் கிங் பாலையாவின் அகண்டா 2 படம் இன்று வெளியாகாத நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் வெளியான அகண்டா படம் அந்த ஆண்டின் தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.
இதனையடுத்து இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் சில நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.