பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாகப் பாரம்பரிய கைவினைப் பொருளான, பிரம்புப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
கண்ணைக் கவரும் கலைநயத்துடன் கூடிய இந்தப் பிரம்பு பொருள்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பிரம்பு பொருள்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வரி குறைப்பை தொடர்ந்து உற்பத்தியை அதிகரித்து குறைந்த விலைக்குப் பொருள்களை விற்கவுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.