கமுதி அருகே காவல் சார்பு ஆய்வாளர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் காவல் நிலையத்தில் முருகன் என்பவர் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு உப்பங்குளம் கிராமம் அருகே தனியாகச் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்துத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். முகம், தலையில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் முருகன், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து எஸ்ஐ முருகன் புகார் அளிக்காத நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், உப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் எஸ்ஐ தகாத உறவில் இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.